18 தொகுதிகள் காலி: 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா?

திங்கள், 18 செப்டம்பர் 2017 (22:10 IST)
தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் இன்று காலை தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர்களுடைய 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக சட்டசபை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் மற்றும் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி என மொத்தம் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது.



 
 
எடப்பாடி பழனிசாமி அணியினர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் தகுதி இழந்த 18 எம்.எல்.ஏக்களும் அவரது குடும்பத்தினர்களும் சோகமாக உள்ளனர். இவர்களில் ஒருசிலர் முதல்முறையாக எம்.எல்.ஏக்கள் ஆனவர்கள் என்பதும், வெற்றி பெற பல கோடிகளை செலவு செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தேர்தல் ஆணையத்திற்கு தொகுதிகள் காலி என்ற அறிவிப்பு மட்டுமின்றி தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 18 தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சட்டசபை விடுதியில் உள்ள அறைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18 அறைகளும் காலி செய்யப்பட்டவுடன் அந்த அறைகள் சீல் வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்