ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (09:52 IST)
ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

திட்டமிட்டப்படி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை என்றாலும் விரைவில் மீண்டும் ராக்கெட்டை ஏவும் தேதியை அறிவிப்போம் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை தள்ளிவைப்பு காரணமாக, ககன்யான் திட்டத்தின் முதல் மனித விண்வெளிப் பயணம் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் என்று ISRO அறிவித்திருந்த நிலையில் அது மேலும் சில மாதங்கள் தள்ளிவைக்கப்படலாம் என தெரிகிறது.

ககன்யான் திட்டத்தின் மூலம், இந்தியாவின் முதல் மனித விண்வெளி வீரர்கள் விண்ணில் பறக்க உள்ளனர் என்பதும், இந்த திட்டம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்