தமிழகம் முழுவதும் இன்று காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் தரமறுப்பதை கண்டித்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடந்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பந்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில் கட்டிங் போட்டாலும் கர்நாடக சரக்கை போடாதே என்றும் விவசாயிகளுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக காவலி பய கிட்ட போய் சொல்லு நாங்க களமிறங்கிட்டோன்னு என்ற வாசங்கள் இடம் பெற்றுள்ளது.