பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம்..!

Siva

வியாழன், 12 செப்டம்பர் 2024 (07:36 IST)
பொங்கல் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்பும் பொதுமக்கள் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கு இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 10ஆம்  தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்க இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டு  பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் இன்று 10 மணிக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்றும் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்