சென்னை-மன்னார்குடி இடையே புதிய வந்தே பாரத் ரயில்... பயணிகள் மகிழ்ச்சி..!

Mahendran

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (18:01 IST)
சென்னை - மன்னார்குடி இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்க ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் மன்னார்குடி பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது என்பதும் சமீபத்தில் கூட தமிழகத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கத் தொடங்கின என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூருக்கு குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வழித்தடத்தில் புதிய வந்தே  பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .

டெல்டா பகுதியில் வேளாங்கண்ணி, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய முக்கிய நகரங்கள் இருக்கும் நிலையில் சென்னை - மன்னார்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கினால் பயணிகள் பலன் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ஆய்வுகள் நடந்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின் இந்த ரயில் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், மைசூர், விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்