அரசு வழங்கும் ரூ.2,500: எங்கு எப்படி பெறுவது??

சனி, 26 டிசம்பர் 2020 (08:29 IST)
பொங்கல் பரிசுக்கான டோக்கன் இன்று முதல் 30 ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கொண்ட பையும், ரொக்க தொகையும் வழங்கி வருகிறது. 
அதே போல் 2021 ஆண்டும் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும் அறிவித்தனர். மேலும் பணத்தோடு ஒரு கரும்பு, வெல்லம், சர்க்கரை முந்திரி திராட்சை ஆகியவற்றையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுப் பணமும் பொருட்களும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடைகளில்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்