இதற்கு இந்துத்துவா அமைப்புகள் மற்றும் பாஜக கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ஸ்டாலின் செய்த இந்த செயலுக்கு தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் பூஜாரிகள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மறைமுக கூட்டணி வைத்து செயல்படுகின்றன. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் அதைநோக்கி செல்கிறதா என்று தெரியவில்லை பொன். ராதாகிருஷ்ணன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.