முதல்வர் அனுமதி தேவையில்லை; எனக்கு அதிகாரம் உள்ளது: ஆளுநர் பன்வாரிலால்

செவ்வாய், 26 ஜூன் 2018 (16:08 IST)
மாநிலத்தின் எந்த பகுதியிலும் முதல்வரின் அனுமதியில்லாமல் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

 
நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளை அவர் கார் மீது வீசி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
 
இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சிக்கு எதிரானது. ஆளுநருக்கு மாநிலத்தில் ஆய்வு செய்யும் அதிகாரம் கிடையாது. இதையும் மீறி ஆளுநர் செய்தால் திமுகவின் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இதையடுத்து ஆளுநர் சார்பில், ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மு.க.ஸ்டாலின், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டும் தோனியில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 7 ஆண்டுகள் அல்ல, ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் ஆளுநரின் செயலை கண்டிப்போம் என்று கூறினார்.
 
இன்று மீண்டும் ஆளுநர், ஆய்வு செய்வது குறித்து இரண்டாவது முறையாக விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிரா சட்ட வல்லுநர் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
மக்களின் நலனுக்காக ஆய்வுகள் தொடரும். இது தமிழக அரசுக்கு எதிராக ஆய்வு கிடையாது. ஆளுநருக்கு மாநிலத்தின் எந்த பகுதியிலும் முதல்வரின் அனுமதியில்லாமல் ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்