தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என பேட்டி அளித்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தற்போது பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை,மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசியல் ஆதாயத்திற்காக திமுக சிஏஏ, என்ஆர்சி-ஐ எதிர்க்கிறது. இருப்பினும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பை தலை வணங்கி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.