காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: திருடிய பொருட்களை வீதியில் வீசியெறியும் கள்ளக்குறிச்சி மக்கள்!

வெள்ளி, 22 ஜூலை 2022 (10:53 IST)
காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: திருடிய பொருட்களை வீதியில் வீசியெறியும் கள்ளக்குறிச்சி மக்கள்!
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் எதிர்பாராத வகையில் மரணமடைந்த நிலையில் அந்த மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது
 
இந்த வன்முறையை பயன்படுத்தி பலர் பள்ளிக்குள் புகுந்து பொருட்களை திருடி சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை உடனடியாக திருப்பி கொண்டு வந்து தர வேண்டும் என்றும் இல்லையேல் வீடு வீடாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது
 
இந்த அறிவிப்பை அடுத்து கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை சாலையோரங்களில் மக்கள் வீசிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்