நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிசேஷக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட சில சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்த எதிரி அபிஷேக் ரபி, வ/29 என்பவரை நேற்று (29.07.2024) செய்தனர்.