சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பலர் போலீஸார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்த கண்டன பதிவுகளை இட்டு வருகின்றனர். காவலர்கள் பொதுமக்களை தாக்கும் சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கொரோனா ஊரடங்கில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய காவலர்களின் நற்பெயருக்கு சாத்தான்குளம் சம்பவத்தால் கலங்கம் விளைந்ததாக சிலர் வருத்ததுடன் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஓசுர் தேன்கனிகோட்டையை சேர்ந்த ஜவஹர்லால் என்பவர் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் போலீஸாரை அவதூறான வார்த்தைகளால் அவர் பேசி பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஜவஹர்லாலை தேடி வருகின்றனர். டிக்டாக் செயலி தடை செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்னர் அவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.