பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்ட மேலதிகாரி - வைரல் வீடியோ

புதன், 6 செப்டம்பர் 2017 (11:34 IST)
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது, பெண் காவல் அதிகாரி ஒருவரிடம் உயர் அதிகாரி ஒருவர் தவறாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நீட் தேர்வால் தனது மருத்துவர் கனவு கலைந்த மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
 
இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டிக்கொண்டிருந்த போது, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் அதிகாரிகள் முயன்று கொண்டிருக்கும் போது, அங்கிருக்கும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் அருகில் நிற்கும் ஒரு பெண் அதிகாரியின் உடலில் கை வைத்து தள்ளிவிடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, அதன் அடிப்படையில் அந்த அதிகாரியிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Courtesy - Sun News Tamil

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்