அரசுக்கு எதிராக போராட்டம் : களத்தில் குதித்த தினகரன்

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (13:34 IST)
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வருகிற 9ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.


 

 
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த ஏழை மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களிலும் போரட்டம் வெடித்துள்ளது.
 
இந்நிலையில், வருகிற செப்டம்பர் 9ம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களோடு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தினகரன் “மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. எனவேதான் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளோம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றன” என அவர் தெரிவித்தார்.
 
ஆளுங்கட்சியை சேர்ந்த தினகரனே, அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்