வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரம்!

Sinoj

வியாழன், 8 பிப்ரவரி 2024 (21:27 IST)
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு புரளி இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக குற்றவாளியின் இமெயின் முகவரி  பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றவாளி பயன்படுத்திய அங்கீகரிப்படாத தனியார் நெட்வொர்க் என்பதல் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இமெயில் அனுப்பியர் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படும்  நிலையில், சைபர் குற்ற வல்லுநர்கள் உதவியால் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரமுயற்சி மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.  சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும், நாளை வழக்கும் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்