மதுரை, விளாச்சேரி மொட்டமலையை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற நரிக்குறவ இனப்பெண் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தங்கள் இனப்பெண்கள் காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வியாபார ரீதியாக கன்னியாக்குமரி சென்ற தன் மகன், மருமகள் உள்ளிட்ட 13 பேரை கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மண்டைக்காடு காவலர்கள் கைது செய்து இருட்டறையில் அடைத்தனர்.
பின்னர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விசாரித்து, பின்னர் இது தொடர்பாக டிஜிபி, உள்துறை செயலாளர், கன்னியாக்குமரி எஸ்.பி. உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.