சட்டவிரோத மதுவிற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:48 IST)
இலாலாபேட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
இலாலாபேட்டை காவல்நிலைய சரகம், மேட்டுமகாதானபுரம் பகுதியில் மதுவிற்பனை செய்த கு.ப.கிருஷ்ணன், அதே பகுதியினை சார்ந்த  அன்னக்கிளி மற்றும் வரகூர் சின்னப்பொண்ணு, வயலூர் தனம் ஆகியோர் சட்டவிரோதமாக மதுவிற்றது கண்டறியப்பட்டு அவர்களை இலாலாபேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்தின் போது கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 40 பாட்டில்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

.Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்