வெள்ளத்தில் யாரும் செல்பி எடுக்க வேண்டாம்: காவல் ஆணையர் எச்சரிக்கை!

வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:02 IST)
வெள்ளம் வரும் நேரத்தில் நீர்நிலைகளில் யாரும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அது ஆபத்தில் முடியும் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
செல்பி உயிரிழப்புகள் ஏற்பட காரணமாகி விடக்கூடாது என்றும் நீர்நிலைகள் அருகில் நின்று ஆபத்தான முறையில் யாரும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளார் 
 
நீர்நிலை நீர்நிலைகள் அருகில் நின்று செல்பி எடுப்பதால் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாகி விடாது என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
கடந்த இரண்டு நாட்களாக நீர்நிலைகள் அருகில் சென்றும் வெள்ளம் வரும் நேரத்திலும் ஆபத்தான முறையில் செல்பி எடுத்து வருவதாக புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்