கொரியா பூங்காவில் வைக்கப்பட்ட ஸ்குவிட் கேம் பொம்மை! – செல்பி எடுக்கும் ரசிகர்கள்!

வியாழன், 28 அக்டோபர் 2021 (12:46 IST)
நெட்ப்ளிக்ஸில் பிரபலமான ஸ்குவிட் கேமில் வரும் பொம்மை நிஜமாகவே பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

நெட்ப்ளிக்ஸில் வெளியான கொரிய வெப்சிரிஸ் ஸ்குவிட் கேம். இந்த வெப் சிரிஸ் உலக அளவில் பிரபலம் ஆகியுள்ள நிலையில் பலர் இந்த வெப்சிரிஸில் இடம்பெற்ற உடைகள் போன்றவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வெப்சிரிஸில் ரெட் லைட் க்ரீன் லைட் விளையாட்டில் வரும் கொலைகார பொம்மையை உண்மையாகவே கொரியாவில் சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது. இந்த பொம்மை முன்னே நின்று பலரும் செல்பி எடுத்து ஷேர் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்