விக்கிரவாண்டியில் களமிறங்கும் பாமக.. பச்சைக்கொடி காட்டிய பாஜக.. விரைவில் வேட்பாளர் அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 11 ஜூன் 2024 (16:49 IST)
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்தும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் பாஜக கூட்டணியின் சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக  போட்டியிட போவதாகவும் அதற்கு பாஜக பச்சை கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் பாமக நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் இருந்து பாமக போட்டியிட்டால் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்