தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜுன் 24ஆம் தேதி கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஜூன் 20-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அன்றைய தினம், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.