பொன் முட்டையிடும் வாத்தை அறுக்காதீர்கள்! – பட்ஜெட் குறித்து ராமதாஸ் கவலை!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (13:33 IST)
மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதுக்கு ஒப்பானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2020 – 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பிரபல காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி மீது அரசுக்கு உள்ள பங்கில் குறிப்பிட்ட சதவீதத்தை தனியாருக்கு விற்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பல கோடி மக்கள் எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு பாலிசிகள் எடுத்துள்ளனர். எல்.ஐ.சி அரசின் பங்குகளை கொண்ட நிறுவனம் என்பதே மக்களின் நம்பிக்கைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற காப்பீட்டு நிறுவனங்களை விடவும் எல்.ஐ.சியில் பாலிசிதாரர்கள் அதிகம்.

இந்நிலையில் இதன் பங்குகளை விற்பதையும், பங்கு சந்தையில் எல்.ஐ.சியை வரிசைப்படுத்துவதும் குறித்து ஆட்சேபணை தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள பாமக, பட்ஜெட் தீர்மானத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்