இந்தியா கூட்டணியில் அதிமுகவா? காங்கிரஸிடம் மறைமுக பேச்சு வார்த்தை என தகவல்..!

சனி, 30 டிசம்பர் 2023 (17:53 IST)
இந்தியா கூட்டணியில் திமுக ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில் அதிமுக இந்தியா கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சியிடம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சனாதனம் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு, வட இந்தியர்கள் டாய்லெட் வேலை செய்பவர்கள் என்று கூறிய பேச்சு, மழை வெள்ளத்தை சரியாக கையாளாத தமிழக அரசு ஆகியவை திமுகவுக்கு நெகட்டிவ்வாக உள்ளது.
]
இதனை அடுத்து திமுகவை இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா கூட்டணியில் அதிமுக நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் திமுகவின் அதிருப்தியை சரியாக மக்களிடம் எடுத்துச் சென்றால் அதிக சீட்டுகளை அறுவடை செய்யலாம் என்று கூறி வருவதாகவும் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு திமுக 5 சீட்டுகள் மட்டுமே கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அதிமுகவுடன் இணைந்தால்  10 சீட்டுகள் வரை பெறலாம் என்று எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியா கூட்டணியில் அதிமுக இணைய காங்கிரஸ்  உதவி செய்யும் என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்