அதனை அடுத்து சேலம் - மேட்டூர் இடையேஎ 41 கிலோமீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அது மட்டுமின்றி திருச்சி விருதுநகர், விருதுநகர் தென்காசி, செங்கோட்டை திருச்செந்தூர் மின்மயமாக்க ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார்.
மொத்தத்தில் தமிழகத்தில் அவர் ரூ.19,850 கோடி மதிப்பில் ஆன பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழக வர இருக்கும் நிலையில் அவரை வரவேற்க தமிழக பாஜகவினர் தயாராகி வருகின்றனர். அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.