தேவர் ஜெயந்தி... மறக்காமல் டிவிட் போட்ட பிரதமர் மோடி

சனி, 30 அக்டோபர் 2021 (13:04 IST)
தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். 

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில், இன்று (அக்டோபர் 30) பசும்பொன் முத்துராமலிங்கனாரின் 114 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம். மக்கள் நலனுக்காகவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர். விவசாயிகள் மற்றும் தொழிலார்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என குறிப்பிட்டிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்