ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டினார். தேசத்தொண்டு, தமிழ்த்தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு எல்லாவற்றிலும் மக்களுக்காக குரல் கொடுத்தவரை வணங்குவோம் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.