பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள நிலையில் பல்லடம் பகுதியில் நடந்த கூட்டத்தில் இன்று பேசி வருகிறார். அவர் பேசிய போது தமிழக மக்கள் மிகவும் அறிவாளிகள் என்றும், கொள்ளையர்களின் நாடகத்தை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்க, பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பி வருகின்றனர். மக்களுக்குள் விரோதத்தை ஏற்படுத்தி, அவர்களை பிரித்து, தங்களை நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் தமிழக மக்கள் அறிவாளிகள், அதனால் தான் அவர்களுடைய நாடகம் அம்பலம் ஆகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தமிழ்நாட்டில் பொய் பேசியவர்களின் ஊழல் வெளியே வந்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு தமிழகத்திற்கு தந்ததை விட பாஜகவுக்கு அதிகம் தந்துள்ளது