பாலாற்று அடியில் புதைந்த நகரம்: கல்தூண்கள் கண்டுபிடிப்பு

ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (14:43 IST)
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி பகுதியில் பாலாற்றின் அடியில் கோபுரங்களும், கல்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி பகுதி பாலாற்றில் கடந்த 9 மாதங்களாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், நேற்று பாலாற்றின் நடுபகுதியில் சுமார் 20 அடி ஆழத்துக்குக் கீழே பொக்லைன் எந்திரத்தின் மூலம் மணல் தோண்டியுள்ளனர். அப்போது மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் பழமை வாய்ந்த கோவில் கோபுரங்களும், கல்தூண்களும் வெளியே தெரிந்தது.
 
இதனையடுத்து, கழனிப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ், அணைக்கட்டு தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
இந்த கோபுரங்களையும் தூண்களையும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் கோவிலும் மற்றும் கல்தூண்களுடன் புதையலும் இருக்கலாம் என்றும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்