சென்னையில் பெட்ரோல் விலை ரூ.92ஐ தொட்டது: முடிவே இல்லையா?

வியாழன், 18 பிப்ரவரி 2021 (06:48 IST)
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் 20 முதல் 30 காசுகள் வரை பெட்ரோல் மற்றும் டீசல் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டியுள்ள நிலையில் தமிழகத்தில் 90 தாண்டி தற்போது 92ஐ தொட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து பெட்ரோல் லிட்டர் ரூபாய் 91.98 எனவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் என்பது 85.31 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
மேகாலயா மாநிலத்தில் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இதனைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசும் கணிசமாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் இல்லையேல் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைவார்கள் என்றும் அந்த அதிருப்தி வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்