ஆனால் அதே நேரத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, விலங்குகளை வேட்டையாட கூடாது, விலங்குகளுக்கு எந்த தீங்கும் இழைக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்திற்குள் மலையில் ஏறி இறங்க முடியாது என்று கூறியபோது, அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.