பிரதமரை வாழ்த்தியபோது சொன்ன அந்த வார்த்தை..! – அண்ணாமலை மீது புகார்!

சனி, 4 ஜூன் 2022 (13:08 IST)
சமீபத்தில் பிரதமரை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை பட்டியலின மக்களை இழிவுப்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து சமீபத்தில் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடியை வாழ்த்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில் ஆங்கில வார்த்தையான Pariah என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். அது பட்டியலின மக்களை குறிக்கும் வார்த்தை என்றும், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளதாகவும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியை புகழ்வதாக பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாக பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்