ஆயுத படைக்கு மாற்றுவதெல்லாம் தண்டனையா? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #கொலைகாரEPSஅரசு

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (08:40 IST)
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் இறந்ததாக மக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மு.க.ஸ்டாலின், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல் அதிகாரிகள் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆயுத படைக்கு மாற்றுவதெல்லாம் தண்டனையாகுமா? தந்தை, மகன் சாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில்  #கொலைகாரEPSஅரசு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்