இந்த் வழக்கின் விசாரணையின் போது தமிழகத்தில் ஹெல்மேட் அணிவதைக் கட்டாயமாக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழக அரசு ‘ ஹெல்மெட் அணிவது குறித்து நிறைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இப்போது வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை ’ எனப் பதிலளித்துள்ளது.