வழக்கில் வென்றார் கெயில் – 15 கோடி இழப்பீடு கொடுக்கும் ஆஸ்திரேலிய ஊடகம்.

திங்கள், 3 டிசம்பர் 2018 (13:20 IST)
கிறிஸ் கெய்ல் தங்கள் நிருபர்களிடம் பாலியல் ரீதியான உடல் அசைவுகளைக் காட்டினார் என்று செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 15 கோடி அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளில் நடந்தது. அப்போது,  pஏட்டியெடுக்க சென்ற , தி சிட்னி மார்னிஸ் ஹெரால்ட்  நிருபர்களிடம் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில், மோசமான உடல் அசைவுகளைக் காட்டினார் என்று செய்தி வெளியானது. இதனால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு உருவானது.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த கெய்ல் ‘இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் எனது அறையில் இருந்தபோது நிருபர்கள் யாரும் வரவேவில்லை. என்னுடன் டிவேன் ஸ்மித் உடன் இருந்தார், அவருக்கு உண்மைத் தெரியும். இந்தச் செய்திகள் எனது நற்பெயருக்கும், மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் செயல்’ எனக் கூறினார்.

அதுமட்டுமல்லாமல்  ஃபேர்பேக்ஸ் குழுமத்தின் மீது கெயில் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்ப்பான வழக்காக நடந்தது. மேற்கிந்திய ட்வைன் ஸ்மித்தும் நீதுமன்றத்தில் ஆஜராகி கெய்லுக்கு ஆதரவாக சாட்சியளித்தார். கெய்ல் மீது குற்றச்சாட்டு வைத்த குழுமத்தால் அவை ஒன்றைக் கூட உண்மை என்று நிரூபிக்க முடியவில்லை.

இதனால் வழக்கின் தீர்ப்பு கெய்லுக்கு ஆதரவாக வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேப் போல கடந்த அக்டோபர் மாதம் கிறிஸ் கெய்ல் குற்றமற்றவர் என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கைல் இப்போது கெய்ல் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்ட ஃபேர்பேக்ஸ் குழுமம் அவருக்கு 3 லட்சம்  டாலர் (15 கோடி) இழப்பீடு வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்