மக்களே உஷார் !செல்போனில் செய்தி பார்த்தல் பணம்.... ரூ.100 கோடி மோசடி !

புதன், 5 ஆகஸ்ட் 2020 (22:40 IST)
செல்போன் செயலியில் செய்தி பார்த்தால் பணம் தருவதாக கூறிச் சுமார். 100 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனரென  போலீஸில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அபெக்ஸ் என்ற நிறுவனம் செல்போன் செயலியில் வரும் செய்தியை மட்டும் பார்த்தால் போதும் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறி ஆசைகாட்டி விளம்பரம் செய்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதனால் ரூ. 100 கோடி முதலீடு நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதில் நிறுவனம் சொன்னபடி கடந்த மார்ச் முதல் செயலில் செயலிழந்துவிட்டதால் பணம் வழங்கப்படவில்லை என்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்