மதுரையில் நூலகம் வேண்டுமென மக்கள் கேட்கவில்லை- ஆர்.பி. உதய மார்

திங்கள், 17 ஜூலை 2023 (13:19 IST)
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜர் பிறந்த நாளான கடந்த 15 ஆம் தேதி  திறந்து வைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக உருவாகியுள்ள இந்த நூலகம் திறப்பிற்கு பலரும் திமுக அரசை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில்  நூலகம் வேண்டுமென மக்கள் யாரும் கேட்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில், மேம்பாலம், குடி நீர், சாலை வசதிகள் வேண்டும் என்றுதான் மக்கள் கேட்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் மதுரைக்கு என அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்