மேகதாது அணை விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!

சனி, 15 ஜூலை 2023 (11:19 IST)
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில்  திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது என்றும், பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது என்றும், பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்