டிக்கெட் எடுக்காமல் வித் அவுட் பயணம்! – ஒரு ரயிலில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் வசூல்!

வெள்ளி, 17 ஜூன் 2022 (15:38 IST)
பீகாரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணசீட்டு எடுக்காமல் பயணிப்பவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகமும் சோதனைகள் மற்றும் அபராதங்களை கடுமையாக்கி வருகிறது. பீகாரிலிரிந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சாகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னை வந்தடைந்தது.

அங்கு டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பலரிடம் டிக்கெட் இல்லாதது தெரிய வந்துள்ளது. அதையடுத்து அவர்கள் சென்னையிலேயே இறக்கிவிடப்பட்டதுடன் அபராதமாக மொத்தம் ரூ.51,540 வசூலாகியுள்ளது. அதை தொடர்ந்து அந்த ரயில் புறப்பட்டு காட்பாடி செல்வதற்குள் டிக்கெட் எடுக்காமல் சென்ற மேலும் 199 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களை காட்பாடியில் இறக்கிவிட்ட அதிகாரிகள் ரூ.1,05,500 அபராதமாக வசூலித்துள்ளனர்.

இப்படியாக ஒரு ரயிலில் ஒரே நாளில் டிக்கெட் எடுக்காமல் சென்றவர்களிடம் சுமார் ரூ.1.57 லட்சம் அபராதமாக வசூலாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்