பேனா நண்பர் பேரவை புத்தாண்டு சந்திப்புக் கூட்டம்!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (23:18 IST)
கருவூர், பேனா நண்பர்கள் பேரவையின் புத்தாண்டு சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் 1 - 1. 2022 இன்று காலை கருவூர் திருக்குறள் பேரவை அல்வலகத்தில் நடைபெற்றது.
 
தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் தலைமை தாங்கி திருவள்ளுவர் நாள் காட்டி, பேனா நண்பர் பேரவையின் திங்கள் காட்டிகளை வெளியிட்டு பேசிய போது இரண்டாயிரத்து இருபத்து ஒன்று பல சோதனைகளை சந்தித்த நமக்கு 2022 சாதனை படைக்கும் ஆண்டாக மலரட்டும் என்றார்.
 
அமைப்பாளர் இரா.திருமூர்த்தி பேரவை செயல்பாடுகளை விளக்கினார்.
கண்ணதான், பாகி.தங்கராசு, 'கென்னடி இரவிகுமார், கு பரணிதரன் ராமனாதன், கா.நா.சதாசிவம், ஜெயப்பிரகாஷ், மூங்கில் ராஜா, நாகேந்திர கிருஷ்ணன் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்