பாஸ்போர்ட் எடுக்கும் பொதுமக்களுக்கு உதவ புதிய வசதி.. இடைத்தரகரிடம் ஏமாற வேண்டாம்..!

Siva

வெள்ளி, 12 ஜூலை 2024 (09:14 IST)
பாஸ்போர்ட் எடுக்கும் பொதுமக்கள் அதற்குரிய தகவல் தெரியாமல் இடைத்தரகர்களிடம் ஏமாந்து வருவதாக தகவல் வெளியானதை அடுத்து தற்போது பாஸ்போர்ட் எடுக்கும் பொது மக்களுக்கு உதவ புதிய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்க பொதுமக்களுக்கு உதவுவதற்காக ’மே ஐ ஹெல்ப் யூ’ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிரப்புதல், தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று பொது மக்களுக்கு எடுத்து கூறுதல், அலுவலகத்திற்கு நேரில் வரும் நேரம் போன்ற அடிப்படை சந்தேகங்களுக்கு இங்கு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட் எடுக்கும் பொதுமக்கள் ஏராளமான இடைத்தரகர்களிடம் சிக்கி ஏமாந்து கொண்டிருக்கும் நிலையில் இனிமேல் இடைத்தரகர்களிடம் சிக்கி ஏமாறாமல் இருக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஸ்போர்ட் எடுக்க விரும்பும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 044-28513639, 044-28513640 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல்  917005330666 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்