தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த எட்டாம் தேதி மீண்டும் டி.பி.ஐ. அலுவலக வளாகம் அருகே போராட்டம் தொடங்கியது. நேற்று ஏழாவது நாளாக இந்த போராட்டம் நீடித்த நிலையில், திடீரென மதியம் 12 மணி அளவில் பகுதிநேர ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோதும், ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த போராட்டம் காரணமாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.