பரந்தூர் விமான நிலைய அமைக்க மத்திய அரசு கொடுத்த கிளியரன்ஸ்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Siva

செவ்வாய், 23 ஜூலை 2024 (06:56 IST)
ஒரு பக்கம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அந்த பகுதி மக்கள் ஒரு ஆண்டுக்கு மேலாக போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த விமான நிலையத்திற்கு அனுமதியை அடுத்தடுத்து மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருவது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அங்கு விளைநிலங்களில் விமானம் நிலையம் அமைக்கப்படுவதாக அந்த பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விமான நிலையத்திற்காக 69.05 ஹெக்டேர்  ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் ஆணையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது மத்திய அரசு இந்த விமான நிலையத்திற்கான சைட் கிளியரன்ஸ் வழங்கியுள்ளது.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த அனுமதியை வழங்கியதை அடுத்து சிவில் விமான போக்குவரத்து, ராணுவம் மற்றும் விமானப்படைத்துறை இந்த இடத்தை ஆய்வு செய்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைவதை உறுதி செய்த நிலையில் மத்திய அரசு விமான நிலையம் அமைக்க சைட் கிளியரன்ஸ் அனுமதி வழங்கியுள்ளது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து விமான நிலையத்தின் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்களின் போராட்டமும் தொடரும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்