ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்....

செவ்வாய், 18 அக்டோபர் 2016 (18:12 IST)
முதல்வரின் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் நாளை அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.


 

 
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் கவனித்து வந்த அனைத்து துறைகளும், நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தலைமை செயலாகத்தில் நாளை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.  காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.
 
முதல்வர் பொறுப்புகளை ஏற்ற பின், பன்னீர் செல்வம் நடத்தும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்