பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாருடன் மோதல் - முதல்வரின் மண்டை உடைந்தது

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (16:37 IST)
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்பு போலீசாருடன் மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில், கல்லூரி முதல்வரின் மண்டை உடைந்தது.


 

 
கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள், கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் கல்லூரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதை போலீசார் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் மோதல் எழுந்தது.
 
அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு உள்ளே செல்லும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 18 மாணவர்களிடம் அடையாள அட்டை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அடையாள அட்டை இல்லாத சிலரை கல்லூரி நிர்வாகமும், போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது.
 
இதையடுத்து அங்கு மோதல் எழுந்தது. அப்போது சில மாணவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், கல்லூரி முதல்வர்  காளிராஜ் தலையில் ஒரு கல் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. 
 
அதையடுத்து, அங்கு திரண்ட கல்லூரி பேராசிரியர்கள், சந்தேகப்படும்படியான சிலரை பிடித்து போலீசாரிடம் ஓப்படத்துள்ளனர். அதில் சிலர் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்