பச்சமுத்துக்கு நிபந்தனை ஜாமின்: உயர் நீதிமன்றம்

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (10:39 IST)
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் மோசடி புகாரில் சிக்கிய பச்சமுத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.


 

 
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பச்சமுத்து கடந்த மாதம், 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
 
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கோரிய ஜாமின் மனு தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவல்துறையினர் தரப்பு கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பச்சமுத்துக்கு ஜாமின் வழங்க கூடாது என்று காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று பச்சமுத்துக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின் வழங்கிய நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டதாவது:-
 
ரூ.75 கோடியை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை விசாரனை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை சென்னை முதனமை அமர்வு நீதிமன்றத்தில் வழங்க வேண்டும், தேவைப்படும் போது பெற்றுக் கொள்ளலாம்.
 
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்