இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான்: காங்கிரஸ் பிரமுகர் ப.சிதம்பரம்

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (08:25 IST)
இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்திக்கும் போது தனது கருத்தை தெரிவித்தார். 
 
பாரத நாடு பழம்பெரும் நாடு என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார் என்றும் பாரதம் நமக்கு விரோதம் அல்ல என்றும் அரசியல் சாசனத்தில் இந்தியாவும் இருக்கிறது பாரதமும் இருக்கிறது என்று தெரிவித்தார். 
 
ஆனால் இந்தியா மீது எவ்வளவு காழ்ப்பு, வெறுப்பு திடீரென பாஜகவுக்கு ஏன் வந்தது என்பது வியப்பாக இருக்கிறது என்றும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்று அதன் பெயரை சுருக்கி வைத்ததால் இந்தியா மீது கோபம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார் 
 
 நாளைக்கே பாரத் என்று எதிர் கட்சி கூட்டணிக்கு பெயர் வைத்தால் பாரதம் என்ற பெயரையும் மோடி மாற்றி விடுவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்