இந்தியாவுக்கு எதிராக 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்… பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:54 IST)
ஆசியக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் கடந்த 6 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான்.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 10 ஆம் தேதி இலங்கையின் கொழும்புவில் நடக்க உள்ளது. இந்த போட்டி பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் “நாங்கள் எப்போதும் பெரிய ஆட்டத்துக்கு தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 100 சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம்.  இந்த முறை வெற்றி பாகிஸ்தானுக்குதான்” எனக் கூறியுள்ளார்.

போட்டி நடக்கும் நாளன்று கொழும்புவில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. லீக் போட்டியில் இரு அணிகளும் மோதிய போட்டியும் மழை காரணமாக முடிவு தெரியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்