தமிழகத்தில் ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பில் உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (15:25 IST)
தமிழகத்தில் தனி நபர்கள் தான் கொரொனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், குழுவாக யாருக்கும் பாதிப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரொனா தொற்று சில மாதங்களாகக் குறைந்திருந்த நிலையில், தற்போது, மீண்டும் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. இதையடுத்து,  கொரோனா தொற்றைக் குறைக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் வேண்டி, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

நேற்று, தமிழகத்தில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1366 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தனி நபர்கள் தான் கொரொனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், குழுவாக யாருக்கும் பாதிப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் நாட்டில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளன. தமிழகத்தில் தினமும், 4000 பேருக்கு ஆர்.டி.பி.சிஆர் பரிசோதனை நடைபெறுகிறது. அதை தினமும் 11,000 பரிசோதனை என்ற அளவில்  உயர்த்தப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்