ஆளுனருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே,பி.முனுசாமி

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (13:06 IST)
ஆளுநருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது அதனால் அவர் சொல்லி இருக்கிறார் என்று கூறிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி இருப்பினும் அவர் கூறிய கருத்து மனவேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து நேற்று ஆளுநர் தனது கருத்தை தெரிவித்த நிலையில் இது குறித்து பல கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநர் ரவியின் சர்ச்சை கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் கே பி முனுசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் மக்களின் உணர்வுகள் அடிப்படையில் தான் கடந்த கால அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்வது என்றும் ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் இது போன்ற கருத்துக்கள் சொல்வது அவருக்கே அழகு இல்லை என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் உலக தலைவராக உள்ள மோடி அந்நிய நாட்டு பணம் இந்தியாவுக்கு வர அனுமதிக்க மாட்டார் என்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக ஆளுநர் கூறியது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்