அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கேரள, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது . எனவே நாளை முதல் மார்ச் சரக்கு வாகனங்கள், குறைந்த அளவில் வெளிமாநில அரசு பேருந்துகள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படும் , பால் ,பெட்ரோல், டீசல்,காய்கறி கொண்டு வரும் வாகனங்களுக்கும், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ், சிலிண்டர் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.